Skip to main content

தேசாந்திரி

எஸ் ராமகிருஷ்ணனின் தேசாந்திரி படிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளை விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர்.
"உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்துகிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டுசெல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை "
"நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பும் பிரமாண்டமான அதன் விசையும் , ஈரக்காற்றும் எப்படி நேரில் காணாமல் உணரமுடியதோ , அது போல , இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யாமல் ஒருவன் இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை மனதில் உருவாக்கவே முடியாது ".
அவர் அலைந்து திரிந்த நகரங்களில் கண்ட காட்சிகளை , பெற்ற அனுபவங்களை , அனுபவித்த வெம்மையை , குளுமையை நம்மை உணரச் செய்கிறார். அதுவே அவரின் எழுத்தின் பலம்.
கும்பகோணம் , குற்றாலம் , கொடைக்கானல் , சென்னை , தனுஷ்கோடி, சோழமண்டலம் , பழனி என்று நாம் செல்லும் சுற்றுலா இடமாகட்டும் , அர்ச்சுனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள நல்லதங்காள் கிணறு , திருவக்கரை தேசிய காப்பகம், வெள்ளாம்பி என்னும் ஆதிவாசிகள் வசிக்கும் இடம், கீச்சாங்குப்பம் போன்ற அதிகம் பயணிக்கப்படாத இடமாகட்டும் .. அவர் கண்ட காட்சிகளை நம் கண்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.
"நான் கண்ட காட்சிகள் எனது விருப்பத்தின் சாட்சிகள். எனது விருப்பம் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. எனது தேடுதலில் நான் கண்டுகொண்ட ஒரே உண்மை , மனித வாழ்வு மிக விசித்திரமானது என்பதே .."
வெள்ளாம்பி காணிகள் அவரிடம் சொன்னது " நாங்கள் படிக்கவில்லை. அனால் எல்லாவற்றையும் நம்புகிறோம் . நீங்கள் படித்தவர்கள் . ஆனால் எதையும் நம்புவதில்லை . எங்களைக் காப்பாற்றுவது படிப்பறிவு அல்ல, இந்த மலை தான் . உங்களுக்கு மலை பொழுதுபோக்கும் இடம். எங்களுக்கு பிறப்பிடம் . நீங்கள் மலையைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் நூறு வருடங்கள் ஆகும் ".
"யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றன் . அது சந்தேகத்தின் நிழல் விழாத காலம். இன்று நாம் அடையாள அட்டைகளும் கடவுச் சீட்டுகளும் இல்லாமல் பயணிப்பது சாத்தியமில்லை. அலைந்து திரியும் துறவிகளே கூட தங்களுடைய பெயரை உடலில் பச்சை குதிக்கொண்டு அதை அடையாள அட்டைப் போலக் காட்டுகிறபோது , நான் எம்மாத்திரம் சொல்லுங்கள் "...
" கோழிக்குஞ்சுகளுக்குக் கூட நீலம்,மஞ்சள்,சிவப்பு என நிறம் மாற்றி பூசி விற்கத் தொடங்கிவிட்ட வணிக உலகில் கலைகள், சிற்பம், பாரம்பரிய இசை என்று பேசுவது கூட பைத்தியகாரத்தனமானதாக கருதப்படும். ஆனாலும், காலத்தில் நாம் எதையல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ, அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத்திரும்ப நிரூபித்து வருகிறது"
"டீக்கடைகளை விடவும் அதிகமாக பாலர் பள்ளிகள் பெருகிவிட்டன, கோழிப்பண்ணைகளைவிட அதிகமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கின்றன என்றால், கல்வி வளர்கிறது என்று அதற்கு அர்த்தம் இல்லை. டீக்கடையைவிட,கோழிப்பண்ணையைவிட கல்வி அதிக வருமானம் தரும் வணிகமாகிவிட்டது என்பதே பொருள். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு இருக்கும் இந்தக்கல்விச் சீர்கேடு, நோய்க்கிருமியை விடவும் மிக ஆபத்தானது"
நம் காலத்தில் இவரின் எழுத்தை நாம் படிக்க கிடைத்தது பாக்கியமே . அதை நாம் படிக்காமல் இருப்பது அவருக்கு நாம் செய்யும் இழுக்கே ..

Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன