Skip to main content

Posts

Showing posts from 2019

அம்மா வருவாயா?

முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்துப் பேசி முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய அனுபவம் நெகிழ்ச்சியானதே. இருவருமே புளகாங்கிதம் அடைந்த ஒரு வித்தியாசமான தருணம்.  "அம்மா வருவாயா? " என்ற புத்தகத்தை அட்லாண்டா வாழ் தமிழர் ராஜி ராமச்சந்திரன் எழுதி பாண்டிச்சேரி "ஒரு துளிக்கவிதை" என்ற இயக்கம்  அட்லாண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிட்ட நிகழ்ச்சியில் தான் அது நடந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய லட்சுமி சங்கர் அவர்கள் நுலில் உள்ள வியாசங்களைப் பற்றி ஆற்றிய பேரூரை இந்தப் புத்தகத்தை வாங்கத் தூண்டியது.  அன்றே படிக்க ஆரம்பித்து அமெரிக்க் குடும்ப வாழ்க்கையில் துளித்துளியாக கிடைக்கும் நேரங்களில் படித்து மூன்று நாட்களில் படித்து  முடிக்க முடிந்தது. மிக எளிய நடை. படிப்போரை வேகமாக உள்ளிழுக்கும் ஒரு எளிமை எழுத்தில் இருக்கிறது.  அனுபவக் கட்டுரைகள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்டுரைகளையும் சேர்க்க முடியும் என்றாலும் அவை மிகவும் வேறுபட்ட பல அனுபவங்களை வைத்து

அய்யா வீடு திறந்து தான் கிடக்கு

அது ஒரு குளிர்கால இரவு. ஏழு மணி தான் ஆயிருக்கும் ஆனால் அன்றைய இரவுக்கு கொஞ்சம் கருமை அதிகமாகவே இருந்தது போலத் தெரிந்தது.  கையில் லேப்டாப் பையுடன் வேகமாக அந்தப் பார்க்கிங் லாட்டில் அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். பத்துக்கும் குறைவான கார்களே அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆள் நடமாட்டமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. மனதிலும் நடையிலும் வாடகைக்காரை திருப்பிக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்ப விமானத்திற்கு சரியான நேரத்துக்குப் போகனும்கிற அவசரம். அந்த இருளின் பயமும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. என் காரைத் தூரமாக இருந்தே ரிமோட்டால் திறந்து வைத்துக்கொண்டேன்.   அந்த சாம்பல் நிறக்காரை அடைந்தவுடன் பின் கதவைத் திறந்து வேகமாக லேப்டாப் பையைத் திணித்து கதவை ஓங்கி மூடினேன். அதே வேகத்துடன் ஓட்டுநர் இருக்கையையும் திறந்து உள்ளே நுழைந்தேன். இது மாதிரி இருளான இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் மக்களோ, கஞ்சா அல்லது ஏதோ ஒரு போதைக்காக இரந்து நிற்கும்   மனிதனோ, பயமுறுத்தும் எண்ணத்துடன் விகார முகத்தைக் கொண்ட ஆணோ பெண்ணோ,  இருப்பார்கள் என்று எனது ரொம்ப நாளைய பயம். காருக்குள் நுழைந்த

மானுடம் வெல்லும்

கொல்லைகள் வறண்டு போயிருந்த நவம்பர் மாதம். குளிர் தாங்கும் தடித்த உடைகளுக்கு மக்கள் மாறிக்கொண்டிருந்தனர். நன்றி தெரிவிக்கும் சீசன் களை கட்ட ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும் . பெரும்பாலான மக்கள் சொந்த பந்தங்களை நேரில் கண்டு அவர்களோடு விழாவை விமரிசையாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.  பலசரக்குக் கடைகளில் குமிந்த கூட்டம் வண்டி நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தது. சிறுவர்களின் கைகளில் வண்ணப்படுத்தப்பட்ட காகித வான்கோழி, இறகுகளால் செய்யப்பட்ட தொப்பி, சிறு கொட்டு போன்ற அவர்களது படைப்புகள். “ஒன் லிட்டில் ட்டூ லிட்டில் த்ரீ லிட்டில் இன்டியன்ஸ்“  போன்ற நர்சரிப் பாட்டுகள். “ செவ்விந்தியர்கள் காலால் நடந்து வெகுதூரம் சென்றனர். அவர்களுக்குத் தேவையான படகுகளை அவரே செய்தனர். வேட்டையாடியும் விவசாயம் செய்தும் உணவுகளைப் பெற்றுக் கொண்டனர். மேலு‌ம் மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தினர் ” என்று ஆய்வறிக்கைகள் ஒருபக்கம். இன்னொரு சிறுவர் கூட்டம் வான்கோழிகளைப் பற்றியும்    செவ்விந்தியர்களைப் பற்றியும் விழாக் கொண்டாட்டங்கள் பற்றியும் இலக்கியங்களை படித்தும் எழுதியும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பேருந்