Skip to main content

Posts

Showing posts from 2015

புது மனைப் புகு விழா

நண்பன் ஒருவன் புது மனைப் புகு விழாவிற்கு அழைத்திருந்தான். 2000 சதுர அடியில் கூடுவாஞ்சேரி பக்கம் ஒரு பெரிய தனி வீடு கட்டியிருக்கான். ரெண்டு பஸ் மாறி பஸ் ஸ்டாப் ல இறங்கி ஒரு பர்லாங் நடந்து போய் சேர்ந்தேன். நிறய பேரை கூப்பிடலைன்னு அங்கே போன பின்புதான் தெரிய வந்தது. காதைக் கிழிக்கும் சத்தத்தில் இல்லாமல் " பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோலமயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே" என்று டி. எம். எஸ் மிதமான சத்தத்தில் பாடிக் கொண்டிருந்தார் . தோரணத்திற்கு கட்டி இருந்த வாழை மரத்துக்கு பக்கத்துல செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போனேன். நண்பனும் அவனோட மனைவியும் "வாங்க" ன்னு இரு கரம் குவித்து வரவேற்றனர் . "தச்சு கழிச்சாச்சா" ன்னு விசாரிச்சேன் . " 4 மணிக்கே முடிஞ்சுது " ன்னு சொன்னாங்க. ஊரில் இருந்து வந்த உறவினர்களை அவர்கள் கட்டிய வேட்டி அடையாளம் காண்பித்துக் கொண்டிருந்தது . அவர்கள் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்த பரபரப்பைக் காண முடிந்தது . பார்த்த எல்லாருடைய கைகளில் சந்தானம் தாரளமாக அள்ளி

தேசாந்திரி

எஸ் ராமகிருஷ்ணனின் தேசாந்திரி படிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிடைத்தது. ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளை விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர். "உலகம் பெரியது எனினும் உலகை அறிய நினைக்கும் மனித ஆசை அதைவிடப் பெரியது. எல்லா இரவு பகலிலும் யாரோ ஒரு மனிதனின் கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லா பக்கமும் திறந்துகிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டுசெல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை " "நீர்வீழ்ச்சியின் முன் நிற்கும்போது ஏற்படும் சிலிர்ப்பும் பிரமாண்டமான அதன் விசையும் , ஈரக்காற்றும் எப்படி நேரில் காணாமல் உணரமுடியதோ , அது போல , இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யாமல் ஒருவன் இந்தியாவைப் பற்றிய சித்திரத்தை மனதில் உருவாக்கவே முடியாது ". அவர் அலைந்து திரிந்த நகரங்களில் கண்ட காட்சிகளை , பெற்ற அனுபவங்களை , அனுபவித்த வெம்மையை , குளுமையை நம்மை உணரச் செய்கிறார். அதுவே அவரின் எழுத்தின் பலம். கும்பகோணம் , குற்றாலம் , கொடைக்கானல் , சென்னை , தனுஷ்கோடி, சோழமண்டலம் , பழனி என்று நாம் செல்லும் சுற்றுலா இடமாகட்டும் , அர்ச்சுனாபுரம் என

நண்பனுடன் ஒரு வார இறுதி

"ஓய்"   என்ற சத்தம் பின்பக்கம்  கேட்டு  அதிர்ந்து போனேன்.  திரும்பிப் பார்த்தால் ,  அவன்   என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நின்றான்.    நான் நின்று கொண்டிருந்த அந்த   விடுதியின் வரவேற்பு  அறையில்  இருந்த  ஊழியர்கள்  அனைவர் முகத்திலும் கொஞ்சம்  அதிர்ச்சி கலந்த  வியப்பு . அவன் முகத்தில்  ஆயிரம் வாட்ஸ்  பல்பு  எரியும்  அளவுக்கு  சந்தோசம்.    பின்னே என்ன   வருடங்கள் கழித்து  பார்க்கும்  சேக்காளியைப்  பார்த்தால்  மகிழ்ச்சிக்கு  குறைவா என்ன? அந்த இடத்தில் இருந்து  அவனது அறைக்கு போகும்போது நாங்க   போட்ட சத்தத்தைக் கேட்ட   லிப்டில் சில முகங்கள் சுருங்கின . சில  கண்கள்  வியப்பில்  ஆழ்ந்தன.   அந்த சத்தம் இவன் என்னுடைய நீண்ட கால   நண்பன்  என்பதை இந்த உலகுக்கு உணர்த்த  என்னுடைய  குரல்வளையும்  அவனுடைய  குரல்வளையும்  போட்டி போட்டு நடத்திய பந்தயம். நான் நினைத்திருந்தாலும் அவன் நினைத்திருந்தாலும் அதன்  வீரியத்தை  குறைத்திருக்க முடியாது. உற்சாகம்  கரை புரண்டது .  பேச்சுக்கள்  நிற்காமல்   நீண்டன .  குசலங்கள்  விசாரிக்கப்பட்டன .   கணப் பொழுதில் லிப்ட் எங்களை அவன் தங்கி இருந்த தளத்துக்க