Skip to main content

Posts

Showing posts from August, 2020

அனந்தியின் டயறி

  அனந்தியின் டயறி என்பது ஜெர்மனியின் பெர்லின் நகரில் வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு நூல். இளங்கல்லூரிப் பெண் ஒருத்தியின் பார்வையில் புலம்பெயர் வாழ்க்கையின் அனுபவங்கள்  குறித்து ஒரு வருடத்தின் டயறிக் குறிப்புகளாக எழுதியுள்ளார்.  முதலில் நூலின் வடிவத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.நம் குழந்தைகள் வாசிக்கும் Diary of wimpy kids புத்தகமும் மேலும் பல புத்தகங்களும் எழுத்தாளருக்கு இந்த டயறி வடிவத்தை நோக்கிய ஈர்ப்பை அளித்ததாக முன்னுரையில் கூறியுள்ளார். இந்த வடிவம் எழுத்தாளருக்கு ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. கதை, கவிதை, நகைச்சுவை, முகநூல் குறிப்பு, நூல் அறிமுகம், ஆங்கில மற்றும் ஜெர்மன் வார்த்தைகள் கற்பித்தல் , திரைப்பட அறிமுகம், டிவி தொடர் விமர்சனம், நடன வகுப்பு, பயணக் கட்டுரைகள், சமைய‌ல் குறிப்புகள் என இவற்றின் வழியாக ஒரு புலம்பெயர் வாழ்க்கையை சித்தரிக்க இந்த வடிவம் பெரிதும் உதவியிருக்கிறது. இந்த வடிவம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. சாருவின் ஜீரோ டிகிரி மற்றும் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் இவைகளும் குறிப்புகளாகவே விர

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி