Skip to main content

Posts

Showing posts from April, 2019

அய்யா வீடு திறந்து தான் கிடக்கு

அது ஒரு குளிர்கால இரவு. ஏழு மணி தான் ஆயிருக்கும் ஆனால் அன்றைய இரவுக்கு கொஞ்சம் கருமை அதிகமாகவே இருந்தது போலத் தெரிந்தது.  கையில் லேப்டாப் பையுடன் வேகமாக அந்தப் பார்க்கிங் லாட்டில் அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். பத்துக்கும் குறைவான கார்களே அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆள் நடமாட்டமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. மனதிலும் நடையிலும் வாடகைக்காரை திருப்பிக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்ப விமானத்திற்கு சரியான நேரத்துக்குப் போகனும்கிற அவசரம். அந்த இருளின் பயமும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. என் காரைத் தூரமாக இருந்தே ரிமோட்டால் திறந்து வைத்துக்கொண்டேன்.   அந்த சாம்பல் நிறக்காரை அடைந்தவுடன் பின் கதவைத் திறந்து வேகமாக லேப்டாப் பையைத் திணித்து கதவை ஓங்கி மூடினேன். அதே வேகத்துடன் ஓட்டுநர் இருக்கையையும் திறந்து உள்ளே நுழைந்தேன். இது மாதிரி இருளான இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் மக்களோ, கஞ்சா அல்லது ஏதோ ஒரு போதைக்காக இரந்து நிற்கும்   மனிதனோ, பயமுறுத்தும் எண்ணத்துடன் விகார முகத்தைக் கொண்ட ஆணோ பெண்ணோ,  இருப்பார்கள் என்று எனது ரொம்ப நாளைய பயம். காருக்குள் நுழைந்த

மானுடம் வெல்லும்

கொல்லைகள் வறண்டு போயிருந்த நவம்பர் மாதம். குளிர் தாங்கும் தடித்த உடைகளுக்கு மக்கள் மாறிக்கொண்டிருந்தனர். நன்றி தெரிவிக்கும் சீசன் களை கட்ட ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும் . பெரும்பாலான மக்கள் சொந்த பந்தங்களை நேரில் கண்டு அவர்களோடு விழாவை விமரிசையாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.  பலசரக்குக் கடைகளில் குமிந்த கூட்டம் வண்டி நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தது. சிறுவர்களின் கைகளில் வண்ணப்படுத்தப்பட்ட காகித வான்கோழி, இறகுகளால் செய்யப்பட்ட தொப்பி, சிறு கொட்டு போன்ற அவர்களது படைப்புகள். “ஒன் லிட்டில் ட்டூ லிட்டில் த்ரீ லிட்டில் இன்டியன்ஸ்“  போன்ற நர்சரிப் பாட்டுகள். “ செவ்விந்தியர்கள் காலால் நடந்து வெகுதூரம் சென்றனர். அவர்களுக்குத் தேவையான படகுகளை அவரே செய்தனர். வேட்டையாடியும் விவசாயம் செய்தும் உணவுகளைப் பெற்றுக் கொண்டனர். மேலு‌ம் மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தினர் ” என்று ஆய்வறிக்கைகள் ஒருபக்கம். இன்னொரு சிறுவர் கூட்டம் வான்கோழிகளைப் பற்றியும்    செவ்விந்தியர்களைப் பற்றியும் விழாக் கொண்டாட்டங்கள் பற்றியும் இலக்கியங்களை படித்தும் எழுதியும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பேருந்